வடகரை பகுதியில் வலம் வரும் சிறுத்தைகளால் பொதுமக்கள் அச்சம்.

by Editor / 03-08-2024 11:27:56pm
வடகரை பகுதியில் வலம் வரும் சிறுத்தைகளால் பொதுமக்கள் அச்சம்.

 தென்காசி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான மேக்கரை அடவி நயினார் கோவில் நீர்த்தேக்கத்திற்கு ஒட்டி உள்ள பகுதியில் மேக்கரை அடவி நயினார் கோவில் நீர்த்தேக்கம் வடகரை சாலையில் அமைந்துள்ள மேட்டுக்கால் நாலாவது பாசன வடபகுதியான சம்படை பாறை பகுதியில் இன்று மதியம் 11 மணி அளவில் அப்துல் காதர் என்பவர் தோப்புக்கு அருகே அவரது மகன் குலாம் என்பவர் தனது தோட்டத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்காக விட்டிருந்ததை பார்க்க சென்ற பொழுது இரண்டு சிறுத்தை ஒரு குட்டி என மொத்தம் மூன்று சிறுத்தைகள்   நடமாடி உள்ளது தனியார் தோட்டங்களுக்கு சென்ற விவசாயிகள் சிறுத்தையை பார்த்தவுடன் உயிர் தப்பினால் போதும் என்கின்ற நிலையில் அதிர்ச்சி அடைந்து வீடு திரும்பி உள்ளனர் மேலும் அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களது அலைபேசிகளில் சிறுத்தையை வீடியோ காட்சிகளாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளனர் இது குறித்து வனத்துறையினருக்கு நிறுத்தி தகவல் தெரிவித்தும் வனத்துறையினரும் அந்த பகுதிக்கு வந்து சேரவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மேலும் விவசாய வயல்வெளிகள் நிறைந்த பகுதியில் தற்போது கார் சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகள் நெல் நாற்று நடுகைக்கு செல்ல முடியாமல் ஒத்திவைக்கப்பட்டது மேக்கரை பகுதியில் வடகரைப்பகுதியிலும் சிறுத்தைகள் நடமாட்டம் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர் ஏற்கனவே தற்போது சீசன் காலம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மேக்கரை பகுதிகளில் உள்ள தனியார் அருவிப்பகுதிகளில் நீராடச் சென்ற வண்ணம் உள்ளனர் அவர்கள் கவனமுடன் செல்ல வேண்டுமென இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

Tags : வடகரை பகுதியில் வலம் வரும் சிறுத்தைகளால் பொதுமக்கள் அச்சம்.

Share via