காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மாநில சட்டப்பேரவை தேர்தல் பார்வையாளர்கள் கூட்டம்.

by Editor / 11-09-2024 07:37:04am
 காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில்  மாநில சட்டப்பேரவை தேர்தல் பார்வையாளர்கள் கூட்டம்.

டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே  தலைமையில் மாநிலத் தேர்தல்களை சரியான முன்னேற்பாடுகளுடன் சந்திக்க தயாராகுவதற்காக மாநில சட்டப்பேரவை தேர்தல் பார்வையாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்,அகில இந்திய வார்-ரூம் தலைவரும், திருவள்ளூர் தொகுதி மக்களவை உறுப்பினருமான "முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி" சசிகாந்த் செந்தில், மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினர் செல்வி.சுதா ராமகிருஷ்ணன், சென்னை வேளச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசன் மவுலானா மற்றும் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

Tags : காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மாநில சட்டப்பேரவை தேர்தல் பார்வையாளர்கள் கூட்டம்.

Share via