தி.மு.க மாவட்ட செயலாளர்களுடன் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை
அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு திராவிட முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர்களுடன் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு பிறகு (SIR) 97.37 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
திமுகவின் ஓர் அணியில் தமிழகம் திட்டத்தின் கீழ் கட்சியில் இணைந்த ஒருவரது பெயர் விடுபட்டிருந்தாலும் அதனை உடனடியாக படிவம் ஆறு மூலம் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது
.கமிட்டி மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்களின் பணிகளை மாவட்ட செயலாளர்கள் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என்றும் போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது
.இதில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக ஆலோசனை கூட்டம் பார்க்கப்படுகின்றது.
Tags :
















.jpg)


