5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு போராட்டம்

by Staff / 22-11-2022 01:33:49pm
 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு போராட்டம்

திருமங்கலத்தில் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் வணிகர் சங்கம் சார்பில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு போராட்டம் மற்றும் வாடகை கார் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் முறையற்ற இயங்கும் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும்., தற்போதைய திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் ஆதரவு தெரிவித்து கப்பலூர் சுங்கச்சாவடிக்கை எதிராக பேசி வருகிறார்.

 

Tags :

Share via

More stories