அண்ணா குறித்த வீடியோ.. அதிமுகவில் இருந்து முதல் குரல்

இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் பெரியார் மற்றும் அண்ணாவை விமர்சித்து வீடியோ ஒளிபரப்பப்பட்டது. இதற்கு அதிமுகவினர் மௌனம் சாதித்துவரும் நிலையில், அண்ணாவை விமர்சித்தது வருத்தமளிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். மறைந்த தலைவர்களை விமர்சிப்பது போல வீடியோ வெளியிட்டதை தவிர்த்திருக்கலாம் எனக் கூறிய அவர், மாநாடு திமுகவிற்கு பீதியை ஏற்படுத்தியது என்றும் கூறியுள்ளார்.
Tags :