மன்சூர் அலிகானுக்கு போலீசார் நோட்டீஸ்
மன்சூர் அலிகானுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை த்ரிஷா பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்கு ஆஜராக சென்னை காவல்துறை நோட்டீஸ் அனுப்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய மகளிர் ஆணைய அறிவுறுத்தலில் ஏற்கனவே மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை மாநகர போலீசார் நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைக்க உள்ளனர். தன் மீது வேண்டுமென்றே சிலர் திட்டமிட்டு அவதூறு பரப்புவதாக மன்சூர் நேற்று விளக்கம் அளித்திருந்தார்.
Tags :