ரஷ்ய அதிபர் புதின் அதிகாரத்தில் நீட்டிக்கக் கூடாது ஜோ பைடன்

by Staff / 27-03-2022 01:11:09pm
ரஷ்ய அதிபர் புதின் அதிகாரத்தில் நீட்டிக்கக் கூடாது ஜோ பைடன்

ரஷ்ய அதிபர் புதின் அதிகாரத்தில் நீட்டிக்கக் கூடாது என்றும் ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலந்து நாட்டில் நிகழ்த்திய உரையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை விடுத்த அறிக்கையில் புதிய அதிபர் பதவியில் இருந்து நீக்குவது நோக்கமில்லை அவர் அண்டை நாடுகளின் மீது அதிகாரம் செலுத்துவதை தடுக்க வேண்டும் என்று தான் ஜோ பைடன் அவ்வாறு பேசியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

போலந்து அதிபர் அண்ட் ரேஸ் டுடவுடன் வார்சாவில் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினர் கூட்டு நாடுகள் ரஷ்யா தாக்க முற்பட்டால் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அப்போது உறுதியளித்தார்.

நாடுகளின் ஒரு அங்குலம் கூட விட்டுக்  கொடுக்க மாட்டோம் என்றும் அவர் புதினை எச்சரித்தார் நேட்டொ படையைப் பற்றி புதின் தவறான பிரச்சாரம் செய்து வருவதாக கூறிய பைடன் நேட்டோ  தற்காப்புப் படை தான் தாக்கும் படை அல்லா என்றார்.

மேலும் போர் தொடங்கிய 31நாட்களில் முதன்முறையாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஜோ பைடன் போலந்தில் பேச்சுவார்த்தை நடத்தினார் முன்னதாக அகதிகளை சந்தித்து மனம் உருகிய ஜோ பைடன் புதினை  கசாப்பு கடைக்காரர் என்று சாடினார்

 

Tags :

Share via