ஆப்கானில் பெண் கல்வி மறுப்பு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் ஆர்ப்பாட்டம்

ஆப்கானில் பெண் கல்வி மறுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திரளான ஆசிரியைகளும் மாணவிகளும் கபுல் பதாகைகள் ஏந்தி தாலிபான்களுக்கு எதிராக பேரணி சென்றனர்.
கல்வி அமைச்சக அலுவலகம் அருகே திரண்டு அவர்கள் தாலிபான் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
அண்மையில் பெண்கள் கல்வி கற்க அனுமதித்த தாலிபான்கள் பள்ளிக்கு வந்த பெண்களை சிறிது நேரத்திற்கு திருப்பி அனுப்பி பெண் கல்வியை தடை செய்தனர்.
உலக அளவில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பல்வேறு நாடுகள் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
Tags :