நித்தியானந்தா சீடர்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

by Editor / 11-06-2025 04:17:27pm
நித்தியானந்தா சீடர்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கோதை நாச்சியார்புரம் மற்றும் சேத்தூரில் சாமியார் நித்தியானந்தா பரமஹம்சர் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்தில் உள்ள நித்தியானந்தா சீடர்களை வெளியேற்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை ஏற்கனவே இடைக்கால தடை விதித்தது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

Tags :

Share via