பாஜக கூட்டணி மக்களை நம்பி இருக்கும் கூட்டணி. மக்கள்தான் நீதிபதிகள்-எடப்பாடி பழனிசாமி.

திருநெல்வேலியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், “திமுக கட்சி கூட்டணியை நம்பியுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி மக்களை நம்பி இருக்கும் கூட்டணி. மக்கள்தான் நீதிபதிகள், கூட்டணி காலத்திற்கேற்ப மாறும். ஆனால் மக்கள் நிலையானவர்கள்; மக்கள் எடுக்கும் முடிவுதான் இறுதியானது. திமுகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் மக்கள் நிராகரித்துவிட்டனர். வரும் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவது உறுதி” என்றார்.
Tags : பாஜக கூட்டணி மக்களை நம்பி இருக்கும் கூட்டணி. மக்கள்தான் நீதிபதிகள்,