மதுரை - திருமங்கலம் இடையே இரட்டை ரயில் பாதை பணி காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் 

by Editor / 02-02-2023 08:38:50am
மதுரை - திருமங்கலம் இடையே இரட்டை ரயில் பாதை பணி காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் 

தென்னகரயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரயில் எண். 12661/12662, சென்னையிலிருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் 23.02.2023 முதல் 03.03.2023 வரை திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக   செல்லும். மானாமதுரை ரயில் நிலையத்தில் மட்டும் நின்று செல்லும். திண்டுக்கல், மதுரை வழியாக செல்லாது. எலக்ட்ரிக்/டீசல் இன்ஜின் மாற்றம் விருதுநகர் ரயில் நிலையத்தில் நடைபெறும்.இதே போன்று ரயில் எண். 16101/16102, சென்னை எழும்பூர் - கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் 28.02.2023 முதல் 02.03.2023 வரை திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும். மானாமதுரை ரயில் நிலையத்தில் மட்டும் நின்று செல்லும். திண்டுக்கல், மதுரை வழியாக செல்லாது.என தென்னகரயில்வே விடுத்துள்ள அறிக்கையில்தெரிவித்துள்ளது.
 

 

Tags :

Share via