திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

by Admin / 09-01-2026 03:46:45pm
திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலின் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10 அன்று மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ,மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது, ஜனவரி 10 மற்றும் 11ஆம் தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக கடற்கரை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்க 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும் என்பதால் மீனவர்கள் ஜனவரி 10ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via