தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழுவை த .வெ. க.தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
இன்று தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழுவை தமிழக வெற்றி கழகத்தலைவர் விஜய் அறிவித்துள்ளார். அக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள்;
கேஜி .அருண் ராஜ்.
ஜே .சி .டி பிரபாகர்
ஏ .ராஜ்மோகன்
டி .எஸ். கே .மயூரி
ஏ .சம்பத்குமார்
எம் .அருள் பிரகாசம்
விஜய் ஆர். பழனி பாலாஜி
ஜே. முகமது பர்வேஸ்
டி .கே. பிரபு
கிறிஸ்டி ப்ரித்வி
தேன்மொழி பிரசன்னா
எம் .சத்திய குமார்
இக்குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்கள் சிறு ,குறு தொழில் அமைப்புக்கள், தொழிலாளர் அமைப்புகள், பொருளாதார மற்றும் தொழில் வல்லுனர்கள், வர்த்தக சபைகள் ,பல்வேறு ஊழியர் சங்கங்கள் ,விவசாய சங்கங்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ,மகளிர் அமைப்புகள் ,இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் தேவைகளையும் அறிந்து தரவுகளை பெற உள்ளது. அவர்களிடம் இருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களையும் ஒட்டுமொத்த மாநிலத்தையும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அறிக்கை என தயார் செய்ய உள்ளது என. விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Tags :



















