மலைக்கோயிலுக்கு பஸ் வசதி அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.

by Editor / 01-04-2022 10:56:12pm
மலைக்கோயிலுக்கு பஸ் வசதி அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டைதாலுகா பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோவிலில் அனைத்து தரப்பு பொதுமக்களும் கோயிலுக்கு சென்று வர மலை அடிவாரத்திலிருந்து மேலே மலை மேலிருக்கும் கோவில் வரை 2 மினி பஸ்களை ரூ 40 லட்சம் மதிப்பில் அன்பளிப்பாக  கடையநல்லூரை சேர்ந்த அருணாசலம் செட்டியார் என்ற ஆன்மீக வாதி கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினார். இந்த பேருந்துகள் இயக்கத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருமலை கோவில் அடிவாரத்திலிருந்து துவக்கி வைத்தார். இந்த  நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கோவில் செயல் அலுவலர் அருணாசலம், இணை இயக்குனர் அன்புமணி, தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தர்ராஜன், எஸ்.பி. கிருஷ்ணராஜ், எம்எல்ஏக்கள் பழனி நாடார், சதன் திருமலைக்குமார்,  உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது ,  இந்த ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் தமிழக முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்த படாத கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்படும் அதன்படி தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் குடமுழுக்கு  நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் .இந்த ஆண்டு இந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 45 கோடி ரூபாய் செலவில் நடைபெறவிருக்கின்ற திருப்பணிகளை நீதிமன்ற உத்தரவின்படி பாலம் கட்டுவது ,சுற்றுசுவர் கட்டுவது  போன்ற பணிகள் செய்யபட  உள்ளது.

இந்த பண்பொழி   திருமலை குமாரசாமி திருக்கோவிலில் திருவிழா நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளதால் பக்தர்களின் வசதிக்காக அடிவாரத்திலிருந்து மலைக்கோவிலுக்கு எளிதாக வந்து செல்லும் வகையில்  இந்த திருக்கோவிலுக்கு உபயதாரர் அருணாசலம் செட்டியார் அவர்களால்  இந்த 2 பேருந்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோவிலில் தங்கத்தேர்  மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமலை கோவிலில் ஐந்து நிலை ராஜகோபுரம் பணிகள்  மகாகும்பாபிஷேகம் ஆகியவற்றை மேற்கொண்டார். பல்வேறு திருப்பணிகளை அவர் செய்து வருகின்றார். இப்படிப்பட்ட ஆன்மீகவாதிகள் நல்ல உள்ளம் படைத்த நன்கொடையாக இந்து அறநிலைத்துறை அவருடைய சேவையை பாராட்டுகிறது. ஒட்டுமொத்தமாக  இத்திருக்கோவிலுக்கு இன்னும் கூடுதலான இத்திருக்கோவில்  அமைந்திருக்கின்ற பகுதிகளில் கழிவுநீர் செல்வதற்கு உண்டான கழிப்பறைகளை நவீனமான முறையில்  கட்டமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் மலைப்பாதைகளில் அகலமாக இருக்கும் இடங்களில் பூங்காவனம் மற்றும்பக்தர்கள்  அமர்வதற்கான இருக்கைகளை ஏற்படுத்துவதற்கான பணிகள்  மேற்கொள்ளப்பட இருக்கிறது இந்ததிருக்கோயில் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக பக்தர்களுக்கு ஒரு சுற்றுலா தலமாக உருவாகின்ற வகையில் பணியினை மேற்கொள்ள இருக்கின்றது, பங்குனி,சித்திரை,தை  உள்ளிட்ட மாதங்களில் அதிகமான பக்தர்கள்   பால் குடம்  சுமப்பது போன்ற திருவிழாக்கள் நடப்பதால் இக்கோவிலுக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு சென்று இந்த ஆண்டு சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் மானியக் கோரிக்கைகள் இடம் பெறச் செய்வேன் அதன் பின்னர் இந்தக் கோவிலுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து முடிக்கப்படும்  என்றார்.

 

Tags :

Share via