குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை - 2 குழந்தைகள் தீவிர சிகிச்சை

by Staff / 23-03-2024 05:01:57pm
குளிர்பானத்தில் விஷம் கலந்து  குடித்து தற்கொலை - 2 குழந்தைகள்  தீவிர சிகிச்சை

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே உள்ள ஏ. குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் அருள்பாண்டியன் (30). லாரி டிரைவர். இவரின் மனைவி ஜெயப்பிரியா (26). இவர்களுக்கு ஆராதனா (9) என்ற மகளும் சஞ்ஜித் (6) என்ற மகனும் உள்ளனர். வெளியூர்களுக்கு வேலைக்கு செல்லும் அருள் பாண்டியன், மாதத்தில் ஓரிரு நாட்கள் தான் வீட்டிற்கு வருவார். தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த வாரம்
வீட்டில் இருந்து ஜெயப்பிரியா, 2 குழந்தைகளுக்கும் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து விட்டு அவரும் குடித்துள்ளார். அவர்களை உறவினர்கள் மீட்டு வாழப்பாடி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 3 பேரும் சேர்க்கப்பட்டனர். இதனிடையே நேற்று ஜெயப்பிரியா சிகிச்சை பலனின்றி இறந்தார். 2 குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி ஏத்தாப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories