21 ஆம் தேதி வரை செங்கோட்டை-கொல்லம் பயணிகள் ரயில் மட்டும் ரத்து.

by Editor / 15-03-2022 01:05:58pm
21 ஆம் தேதி வரை செங்கோட்டை-கொல்லம் பயணிகள் ரயில்  மட்டும் ரத்து.

புனலூர் - கொல்லம் ரயில் பாதை பிரிவில் மின்மயமாக்கல் பணிகளை விரைவுபடுத்துவதற்காக செங்கோட்டை - கொல்லம் - செங்கோட்டை (06659/06660) விரைவு சிறப்பு ரயில்கள் பிப்ரவரி 24 முதல் மார்ச் 15 வரை முழுமையாக ரத்து செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மின்மயமாக்கல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த 2 ரயில்கள் மேலும் ஐந்து நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது அதன்படி செங்கோட்டை - கொல்லம் சிறப்பு ரயில் (06659) மார்ச் 21 வரையும் கொல்லம் - செங்கோட்டை சிறப்பு ரயில் (06660) மார்ச் 22 வரையும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

 

Tags : Red Fort-Kollam trains will be canceled from the 24th

Share via