11 ஆண்டுகளாக இருட்டு அறையில் மனைவி

தன் மனைவி மீது சந்தேகம் கொண்ட வழக்கறிஞர் ஒருவர், அவரை 11 ஆண்டுகளாக இருட்டு அறையில் அடைத்து வைத்துள்ளார். விஜயநகரத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிபவர் கோதாவரி மதுசூதன். இவர் தன் மனைவியை 11 வருடங்களாக வெளியுலகத்திற்கு காட்டாமல் வீட்டுக்குள்ளேயே வைத்துள்ளார். இது குறித்து இறுதியாக, மனைவயின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் புதன்கிழமை, மதுசூதனன் வீட்டை போலீசார் வாரண்ட் மூலம் சோதனையிட்டனர். அப்போது இருட்டு அறையில் பரிதாபமாக வாழ்ந்து வந்த வழக்கறிஞரின் மனைவியை வெளியே அழைத்து வந்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Tags :