முதலமைச்சராக பதவி ஏற்கும் போது சொன்ன எல்லோரும் நல்லா இருப்போம் என்ற வாக்குறுதி இது தானா? -அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,
தமிழக வெற்றிக்கழக நிர்வாகி மணிகண்டன் சேலம் கொண்டலாம்பட்டி ஏழைப் பெண்களை கடன் வாங்கி தருவதாக கூறி பாலியல் தொல்லை அளித்து வந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, எல்லோரும் நல்லா இருப்போம் என்பது இதுதானா? புதிய ஆட்சி அமைந்த நாளில் இருந்து ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்ற செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதாகவும் தமிழக வெற்றிக்கழக தலைவர் முதலமைச்சராக பதவி ஏற்கும் போது சொன்ன எல்லோரும் நல்லா இருப்போம் என்ற வாக்குறுதி இது தானா என்று கேள்வி எழுப்பி உள்ளதோடு தான் சொந்தக் கட்சி நிர்வாகிகளால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது என்றும் மக்கள் எப்படி நன்றாக இருக்க முடியும் என்றும் அவர் குற்றம் சாட்டியதோடு சேலத்தின்த.வெ.க நிர்வாகி மணிகண்டன் என்பவர் பல பெண்களை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி வீடியோ எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சி அளிப்பதாகவும் இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பாவிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து,.இதே போல் சென்னை ஆலந்தூரில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி வேம்புலி என்பவர் பாலியல் வழக்கில் தேடப்பட்டு வருவதாகவும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியதோடு தன் கட்சி தலைவரை முதலமைச்சராக இருக்கும்போது அவர் கையில் இருக்கும் காவல்துறை மீது தமிழக வெற்றிக்கழகத்தினருக்கு ஏன் எந்த பயமும் வரவில்லை என்கிற கேள்வியையும் எழுப்பி உள்ள எடப்பாடி பழனிச்சாமி இத்தகைய பாலியல் குற்ற வழக்குகளில் எந்த வித அரசியல் குறுக்கீடோஒளிவுமறைவோ இல்லாமல் நியாயமான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனைகளை பெற்றுத்தர வேண்டும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் வலியுறுத்தி உள்ளார்.
Tags :



















