10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் வெளியிடவுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரலில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால், தேர்வுகள் முன்கூட்டியே நடத்தி முடிக்கப்படும் என தெரிகிறது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறையும் 2 மாதம் முழுவதுமாக கிடைக்க வாய்ப்புள்ளது.
Tags : 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை