அ.தி.மு.க பெற்ற வெற்றி வட மாவட்டங்களில் உள்ள 31 தொகுதிகளில் பா.ம.க. போட்ட பிச்சை- அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி .சண்முகம்
இன்று திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி .சண்முகம் நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி வட மாவட்டங்களில் உள்ள 31 தொகுதிகளில் பாமக போட்ட பிச்சை என்றும் பாமக மட்டும் கூட்டணியில் இல்லாவிட்டால் சேலத்தில் உள்ள எடப்பாடி தொகுதியில் கூட எடப்பாடி பழனிச்சாமி தட்டு தடுமாறி தான் வெற்றி பெற்றிருப்பார் என்றும் சேலத்தை தவிர்த்து பார்த்தால் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியில் இல்லாவிட்டால் ஏழு அல்லது எட்டு இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்று இருக்க முடியும் என்றும் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையின்கள் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருவதாகவும் கட்சியின் வாக்கு சதவீதம் சரிந்து கொண்டே போவதாகவும் குற்றம் சாட்டியதோடு திமுகவை எதிர்ப்பதற்காக எம்ஜிஆர் தொடங்கிய இயக்கம் திமுகவோடு இணைந்து முதல்வராக வேண்டும் என்று இபிஎஸ் நினைத்தபோது அதிமுக தன் வலிமையை இழந்து விட்டது என்றும் அதிமுக தற்போது ஒரு குடும்பத்தின் பிடிக்குள் சென்று கொண்டிருப்பதாகவும் தனது மகனை அரசியலுக்குள் கொண்டு வருவதற்காக இபிஎஸ் நாடகம் ஆடுவதாக தெரிவித்ததோடு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு யாா் வேண்டுமானாலும் வரலாம். அவர் மகனும்வரட்டும். அதில் எந்த தப்பும் இல்லை. ஆனால் பகிரங்கமாக அதைச் செய்ய வேண்டும் என்றும்பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடும் என்று நினைப்பது போல இ.பி.எஸ் செயல்படுவதாகவும் கட்சியை விட்டு நிர்வாகிகள் கொத்து கொத்தாக விளக்குவதை அவர் உணவ வராமல் எல்லோரும் துரோகி என்று கூறி வருவதாகவும் தெரிவித்த அவர் கட்சியின் தோல்விக்கான காரணத்தை அவர் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பொதுக்குழுவியோ செயற்குழுவையோ கூட்டாமல் எடப்பாடி பழனிச்சாமி தள்ளிப் போடுவதின் காரணமாக அதிமுகவில் உள்ள அனைவரும் மாற்றுக் கட்சிக்கு சென்று கொண்டிருப்பதோடு அதிமுக தினமும் சீட்டுக்கட்டாக சரிந்து கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டினார். தேர்தலில் தோல்விக்கான காரணத்தை எடப்பாடி பழனிச்சாமி உணரவில்லை.
Tags :



















