16-ம் தேதி திமுக எம். பி. க்கள் கூட்டம்

by Staff / 04-09-2023 02:35:38pm
 16-ம் தேதி திமுக எம். பி. க்கள் கூட்டம்

வரும் 16-ம் தேதி திமுக எம். பி. க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் வரும் 16-ம் தேதி காலை 10. 30 மணிக்கு சென்னை, அண்ணா அறிவாலயம், 'முரசொலி மாறன் வளாகத்தில்' உள்ள கூட்ட அரங்கில் திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் செப். 18 முதல் 22 வரை கூடுவதை ஒட்டி, சிறப்பு கூட்டத்தொடரை எதிர்கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த பல்வேறு விவகாரங்கள் குறித்து திமுக எம். பி. க்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via