திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்கான சுடர் தொடர் ஓட்டம்

திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்கான சுடர் தொடர் ஓட்டத்தை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி தொடங்கி வைத்தார். சேலத்தில் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கான சுடர் தொடர் ஓட்டத்தை சென்னை, அண்ணா சாலையில் சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியார் சிலை முன்பு தொடங்கி வைத்தார். இதில், திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Tags :