மாநிலத்தில் நடக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள்- பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து பேசாமல் இருக்க முடியாது- திமுக தலைவர் மு. க. ஸ்டாலின்.

by Admin / 14-06-2026 02:56:08am
 மாநிலத்தில் நடக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள்- பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து பேசாமல் இருக்க முடியாது- திமுக தலைவர் மு. க. ஸ்டாலின்.

அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் தேர்தல் வெற்றி தோல்களை கண்டு திமுக தொய்வடையாது என்றும் மக்கள் பணியே முதன்மையான பணி என்று தோன்றாற்றும் இயக்கம் என்றும் பொறுப்பான  எதிர்க்கட்சியாக திமுக தன் கடமையை உறுதியோடு செய்யும் என்று குறிப்பிட்டதோடு தாவைக்கு ஆட்சி பொறுப்பேற்ற போது ஆறு மாதங்களுக்கு எந்த விமர்சனம் செய்யப் போவதில்லை என்று தான் கூறியிருந்ததை சுட்டி காட்டியதோடு ஆறு மாதம் கூட விமர்சனம் பண்ணாமல் இருக்கிற மாதிரி இந்த ஆட்சி நடக்குமா என்று தான் முன்பு கேள்வி எழுப்பியதை, ஆட்சி  கவிழ்க்க சதி என்று எதிரிகள் திரித்து பேசுவதாகவும் தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசுக்கு வாக்குறுதிகளை நிறைவேற்ற அவகாசம் தரலாம். ஆனால், மாநிலத்தில் நடக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து பேசாமல் இருக்க முடியாது என்றும் கூறியதோடு தமிழக வெற்றிக்கழக அரசு மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்கும் வேலையில் ஈடுபடுவதாக குறிப்பிட்டு அவர் தமிழக வெற்றிக்கழக அரசு பாஜகவின் ஒரு ஜெராக்ஸ் காபி போல செயல்படுகிறது என்றும் குற்றம் சாட்டியதோடு, அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் இந்த ஆட்சி அகற்றுவார்கள் என்றும் திமுக மீண்டும் எழுச்சியோடு மக்கள் ஆதரவை பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று மகளிர் அணி தொண்டர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார். முன்பு டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தாம் பங்கெடுத்த பொழுது விஜய் அதை விமர்சனம் செய்திருந்தார். ஆனால், இப்பொழுது அவர் மத்திய அரசிடம் எதையும் கேட்காமல் வந்துள்ளார். ஆட்சி நிர்வாகம் என்பது சினிமா படப்பிடிப்பு போன்று அன்று என்றும் எதையும் கேட்டுத்தான் பெற முடியும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

 

Tags :

Share via
Logo