தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியானது தற்காலிகம் என்றும் அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் .

by Admin / 14-06-2026 02:41:47am
தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியானது தற்காலிகம் என்றும் அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் .

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டம் நடந்தது. முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி மற்றும் கட்சியின் கட்ட நடவடிக்கைகள் குறித்தும் காஞ்சிபுரம் உத்திரமேரூர் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர்கள் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பொது குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டதோடு தொகுதிகளில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் கட்சியின் அடுத்த கட்ட ஆக்கப்பூர்வமான வளர்ச்சி பணிகள் குறித்தும் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி அண்மையில் நீக்கப்பட்ட 28 மாவட்ட செயலாளர்கள் மற்றும் உற்கட்சி பூசல்களுக்கு பிந்தைய சூழல் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது கட்சியின் டிஜிட்டல் பிரச்சார உத்திகள் மற்றும் சமூக ஊடக பணிகளை வலுப்படுத்த வாழும் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியானது தற்காலிகம் என்றும் அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்றும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சியினரிடம் நம்பிக்கை ஊட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து மற்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த எண்ணி உள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo