வெளிமாநிலத்தவர் தொடர்புக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

by Editor / 04-03-2023 02:54:17pm
வெளிமாநிலத்தவர் தொடர்புக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

வெளிமாநிலத்தவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது போல் உணரும் வெளிமாநிலத்தவர்கள் காவல்துறை உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவின.இதனால், வட மாநில தொழிலாளர்களிடையே ஏற்பட்டுள்ள அச்ச உணர்வை போக்கும் வகையில் (0421-2203313, 9498101300, 9498101320) போலீசார் உதவி எண்கள் அறிவித்துள்ளனர்.தமிழகத்தில் எந்த ஒரு மோதலும் இல்லை - இந்திய ஜவுளித்துறை மற்றும் தென்னிந்திய மில்ஸ் சங்கம் அறிவிப்பு.புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பு இல்லாததுபோல் உணர்ந்தால் 8883920500 எண்ணை அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Announcement of help numbers for foreigners contact.

Share via