சென்னையில் ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு

by Editor / 25-03-2025 04:18:32pm
சென்னையில் ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு

சென்னையில் ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சூரஜ், ஜாபர் ஆகிய 2 கொள்ளையர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இவர்கள் இன்று அதிகாலை சென்னையில் அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர் உள்ளிட்ட 8 பகுதிகளில் அடுத்தடுத்து பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், மும்பை செல்லும் விமானத்தில் தப்ப முயன்ற இருவரையும் மடக்கிப் பிடித்தனர்.
 

 

Tags :

Share via