ராக்கெட் தாக்குதலில் பலியான கேரள நர்ஸ் குடும்பத்தினருக்கு இஸ்ரேல் அதிபர் ஆறுதல் 

by Editor / 20-05-2021 05:28:00pm
ராக்கெட் தாக்குதலில் பலியான கேரள நர்ஸ் குடும்பத்தினருக்கு இஸ்ரேல் அதிபர் ஆறுதல் 

 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கீரிதோடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி சவுமியா. இஸ்ரேலில் நர்சாக பணியாற்றினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹமாஸ்  நடத்திய ராக்கெட் தாக்குதலில் சவுமியா இறந்தார்.
 அவரது உடல் விமானம் மூலம் கேரளா கொண்டு வரப்பட்டது. பின்னர் கீரிதோட்டில் உள்ள சகாயமாதாசர்ச் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் இஸ்ரேல் துணை தூதர் உள்பட 2 உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 இந்த நிலையில் கடந்த 18ம்தேதி  சவுமியாவின் கணவர் சந்தோஷை இஸ்ரேல் அதிபர் ரூவன்ரிவ்லின் போனில் அழைத்து ஆறுதல் கூறினார். மேலும், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ஜெனாதன்சட்காவும் பேசினார். தூதரகத்தில் உள்ள அதிகாரி ஒருவர் அவர்கள் பேசியதை மலையாளத்தில் மொழிபெயர்த்தார். சந்தோஷ் குடும்பத்தை இஸ்ரேல் நாடு பாதுகாக்கும் என்று இருவரும் உறுதியளித்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo