டெல்லியில் சற்று குறைந்த காற்று மாசு
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு மிகவும் மோசமாக இருந்த நிலையில் இன்று ஓரளவிற்கு குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக தர குறியீட்டில் 400க்கும் அதிகமாக காற்று மாசு பதிவாகியிருந்த நிலையில், இன்று காலை 356 ஆக பதிவாகியுள்ளது. டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதை தொடர்ந்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களும் உடனடியாக பயிர்க் கழிவு எரிப்பதை நிறுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக மாசு சற்று குறைந்துள்ளது.
Tags :