மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கு ஆபத்து எம்பி ஆ.ராசா விமர்சனம்

by Staff / 08-11-2023 12:41:44pm
மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கு ஆபத்து  எம்பி ஆ.ராசா விமர்சனம்

2024ஆம் ஆண்டு பிரதமர் மோடி தப்பித்தவறி கூட ஆட்சிக்கு வரக்கூடாது என்று திமுக எம்பி ஆ.ராசா விமர்சித்துள்ளார். நீலகிரியில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் அரசமைப்பு சட்டம் இருக்காது. நீதிமன்றங்கள் இருக்காது. பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெறாது. அதிபர் ஆட்சியாக மாறிவிடும். இந்துக்கள் என்ற பெயரால் உயர் சாதி மக்கள் மட்டும்தான் இருக்க முடியும். மாநில ஆட்சிகள் தொடர முடியாத நிலை ஏற்படும், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம் என நாட்டை சர்வாதிகார ஆட்சியின் கீழ் கொண்டு வருவார்கள் என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories