திருமணத்தை மீறிய உறவு - இளம் ஜோடி தீக்குளித்து தற்கொலை
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த நர்சிங் மாணவி சவ்மினி தாஸ் (20), கேரளாவை சேர்ந்த அபில் ஆபிரகாம் (29) என்ற இளைஞருடன் பெங்களூரில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார். சவ்மினி தாஸ் ஏற்கெனவே திருமணம் ஆனவர். தனது கணவரிடம் அபில் ஆபிரகாம் குறித்து கூறி, இத்துடன் திருமண உறவை முறித்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார். இதற்கு அவரது கணவர் மறுத்துள்ளார். ஆனால், சவ்மினி தாஸ், தனது கணவரை பிரிந்து அபில் ஆபிரகாமுடன் சேர்ந்து வாழ்வதில் உறுதியாக இருந்துள்ளார். இதையடுத்து அவர் மேற்கு வங்கத்தில் இருந்து மீண்டும் பெங்களூர் வந்த நிலையில் இருவரும் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தனர்.
Tags :



















