மாணவிக்கு பாலியல் தொந்தரவு போக்ஸோ சட்டத்தில் ஆசிரியர் கைது.

மாணவிக்கு பாலியல் தொந்தரவு பக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெரியசாமிபுரத்தை சேர்ந்த கோபிநாத். அதே பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு +2 படித்து வந்த மனைவி ஒருவரை திருமணம் செய்வதாக கூறி ஆசிரியர் கோபிநாத் என்பவர் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்போது பள்ளி படிப்பை முடித்து ஒரு வருடம் ஆன பிறகும், மாணவியை தொந்தரவு செய்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட மாணவி சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்பு ஆசிரியர் கோபிநாத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags : போக்ஸோ