கடையநல்லூரில்  இறந்தவர் உடலை அடக்கம் செய்வதில் பிரச்சனை:  பரபரப்பு...

by Editor / 06-11-2024 11:30:35pm
கடையநல்லூரில்  இறந்தவர் உடலை அடக்கம் செய்வதில் பிரச்சனை:  பரபரப்பு...

 தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் உள்ளூர் ஜமாத்திற்கும் ஏற்பட்ட பிரச்சனையால் பரபரப்பு ஏற்பட்டது.பேட்டை பகுதியைச் சேர்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பிரமுகர் ஒருவரின் தாய்  இஸ்மாயில் பீவி (70) செவ்வாய்க்கிழமைஇறந்த நிலையில் அவரின் உடலை பேட்டை காதர் மைதீன் பெரிய குத்பா ஜும்மா பள்ளி வாசல் சுன்னத்து வல்ஜமாத் பள்ளிவாசல் இடுகாட்டில் புதன்கிழமை அடக்கம் செய்வது என அவரது உறவினர்கள் முடிவு செய்தனர்.இந்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வழக்கப்படி அடக்கம் செய்ய வேண்டும் என இறந்தவரின் உறவினர்கள் தெரிவித்த நிலையில் உள்ளூர் ஜமாத்தார்கள் உள்ளூர் ஜமாத்  வழக்கப்படி அடக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்தனர். 
இதனால் இருதரப்பிற்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. பிரச்சனை காரணமாக உடலை அடக்கம் செய்ய முடியாத நிலை உருவானது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையின்  நீதிமன்றத்தை நாடி  உரிமை பெற்றார் கள் அதன் அடிப்படையில்   கடையநல்லூர் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன், கடையநல்லூர் ஆய்வாளர் ஆடிவேல் உள்ளிட்டோர் இருதரப்பையும் சேர்ந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதன் பின்னர் இரு தரப்புக்கு மத்தியில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் இறந்த இஸ்மாயில்  பீபியின் வீட்டு முன்பு தொழுகை நடத்தி அவர்களின் முறைப்படி இறந்த மூதாட்டியின் உடல் காதர் முகைய்தீன் ஜும்மா பள்ளிவாசல்  மையவாடியில் நல்லடக்கம் செய்தனர் 

 

Tags : கடையநல்லூரில்  இறந்தவர் உடலை அடக்கம் செய்வதில் பிரச்சனை:  பரபரப்பு...

Share via