ஜப்பான் ஸ்லிம் விண்கலம் மீண்டும் நிறுத்திவைப்பு
ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஜாக்ஸா, 'ஸ்லிம்' எனப்படும் விண்கலத்தை நிலவில் ஆய்வு செய்வதற்கு தயாராகி வந்தது. இந்த விண்கலம் எடை குறைந்த லேண்டர் மற்றும் எக்ஸ்ரே இமேஜிங் செயற்கைக் கோளுடன் ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏவ உள்ளதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் மோசமான வானிலை காரணமாக ஆகஸ்ட் 28ஆம் தேதி (இன்று) மாற்றி வைத்தனர். அதன்படி இந்திய நேரப்படி இன்று காலை 9:26 மணிக்கு விண்ணில் ஏவுவதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால், மோசமான வானிலை காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Tags :


















