மத்திய  பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என்று சிறப்பு நிதி ஒதுக்கப்படாதது வருத்தம் அளிக்கிறதுடிடிவி தினகரன்.

by Editor / 26-07-2024 09:55:02am
மத்திய  பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என்று சிறப்பு நிதி ஒதுக்கப்படாதது வருத்தம் அளிக்கிறதுடிடிவி தினகரன்.

திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட மடப்புரம் பெருமாள் கோவில் கீழ சன்னதி தெருவை சேர்ந்த  முன்னாள் நகர் மன்ற தலைவரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளருமான ரவிச்சந்திரனின் மனைவி ரேவதி கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்ததையடுத்து அவரது வீட்டிற்கு துக்கம் விசாரிக்க பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் வருகை தந்தார்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது

மின் கட்டண உயர்வுக்கு காரணம், மத்திய அரசு எனக் கூறுவது தவறு. திமுக அரசின் கையாலாகாத இது தனத்தை காட்டுகிறது. தமிழகத்தில் ஐந்து மின் நிலையங்கள் ஐந்து மின் திட்டங்கள் காற்றாலை சூரிய ஒளி மின்சாரம் என பல்வேறு வகைகளில் மின் உற்பத்தி நடைபெறுகின்ற போது அதன் உற்பத்தி 50 சதவீதமாக குறைந்து விட்டது. அதன் உற்பத்தியை அதிகப்படுத்தாமல் தனியாரிடம் ஒன்றரை லட்சம் கோடிக்கு மின்சாரத்தை திமுகவினர் வாங்குகின்றனர்.இது ஊழல் முறை கேட்டுக்கு தான் வழிவகுக்கும்.நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பணநாயகம் வென்றுள்ளது.

2026 பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமையும். பழனிச்சாமி தனது சுயநலத்துக்காக திமுகவின் பி.டி.மாக செயல்பட்டு வருகிறார் இதையெல்லாம் முறியடித்து அதிமுகவின் தொண்டர்கள் ஒன்றிணைவார்கள். மத்திய பட்ஜெட் ஆனது இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கானது, இதில் பல்வேறு திட்டங்கள் மாணவர்களுக்கு பெண்களுக்கு என பல்வேறு தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.25 மாநிலங்கள் 8  யூனியன் பிரதேசங்களில் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.தமிழகத்துக்கென  சிறப்பு திட்டங்கள் ஏதும் இல்லை என்பது அனைவருக்குமான வருத்தம் என்ற போதிலும் எதிர்காலத்திலும் அதுபோன்ற திட்டங்கள் அறிவிக்க கூடும்.

பிரதமர் மோடி சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் இவர்கள் ஆட்சியில் இருக்கும் வரை தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப் போவதில்லை என்றும் திட்டங்கள் மட்டுமே அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.எனவே, அதன்படி பிரதமர் மோடி தமிழகத்துக்கு திட்டங்களை அறிவிப்பார் என்றார். மேலும், . தற்போது காவிரி நீர் வந்து கொண்டிருப்பது இயற்கையாக மழை கர்நாடகத்தில் பெய்து கொண்டிருப்பதால் தான் இந்த விவகாரத்தில் தமிழக அரசோ அல்லது கர்நாடக அரசோ எடுத்த நடவடிக்கையின் காரணமாக தண்ணீர் வரவில்லை என்று கூறினார்.

மத்திய  பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என்று சிறப்பு நிதி ஒதுக்கப்படாதது வருத்தம் அளிக்கிறதுடிடிவி தினகரன்.
 

Tags : மத்திய  பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என்று சிறப்பு நிதி ஒதுக்கப்படாதது வருத்தம் அளிக்கிறதுடிடிவி தினகரன்.

Share via