கொள்முதல் விலை உயர்வால் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

வெளிமாநிலங்களுக்கு பல்லடத்திலிருந்து கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெளி மாநிலங்களில் பெய்து வந்த கனமழையின் காரணமாக கறிக்கோழி விற்பனை தேக்கமடைந்தது, இதன் காரணமாக கறிக்கோழி கொள்முதல் விலை 66 ரூபாயாக இருந்தது.இந்த நிலையில் தற்போது வடமாநிலங்களில் மழையின் தாக்கம் குறைந்துள்ளதால் வெளி மாநிலங்களுக்கு வாகன போக்குவரத்து சீரான நிலையில் கறிக்கோழிகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்போது கொள்முதல் விலை 91 ரூபாயாக உயர்ந்து இருப்பதால் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடைகளில் கறிக்கோழி கிலோ 180 முதல் 200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.ஆடி மாதம் நிறைவுபெற்று ஆவணி மாதம் பிறக்கிறது. தொடர்ந்து திருமணம் போன்ற விசேஷங்கள் நடத்தப்படும் என்பதால் கறிக்கோழிக்கு தேவை அதிகரித்து கொள்முதல் விலை உயர வாய்ப்பு உள்ளது.
Tags :