இளைஞர் கொடூரமாக அடித்துக் கொலை

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கரமனை பகுதியில் இன்று நடுரோட்டில் இளைஞர் ஒருவரை கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அடித்தும், கல்லால் தாக்கியும் ஒரு கும்பல் கொடூரமாக கொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், இளைஞரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். கொடூர கொலையின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
Tags :