நாக்கை அறுத்து கடவுளுக்குப் படைத்த பயங்கரம்
33 வயது நபர் ஒருவர் தனது நாக்கை அறுத்து கடவுளுக்கு காணிக்கையாக செலுத்தினார். இச்சம்பவம் இன்று காலை சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் தனாடு கிராமத்திற்கு அருகில் உள்ளது. அஞ்சோரா காவல்நிலையம் அளித்த தகவலின்படி, ராஜேஷ்வர் நிஷாத் என்ற நபர், கிராமக் குளத்துக்குச் சென்று, மந்திரங்களை உச்சரித்து, கத்தியால் நாக்கைத் தானே அறுத்துக் கொண்டார். வெட்டப்பட்ட நாக்கை குளக்கரையில் இருந்த ஒரு கல்லில் வைத்தார். நாக்கு அறுக்கப்பட்டதற்கான சரியான காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை.
Tags :

















