முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வருகை

by Editor / 02-10-2021 11:17:33am
முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வருகை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சனிக்கிழமை மதுரை வந்தார்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா பாப்பாபட்டி கிராமத்தில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனி விமானம் மூலம் 9.40 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்த அவருக்கு விமான நிலையத்தில் காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

அவருடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வந்து இருந்தார். தொடர்ந்து அவருக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள் ஐ .பெரியசாமி, பி.மூர்த்தி, பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், கேகேஎஸ்எஸ்ஆர், மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா, ஊரக காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோ.தளபதி, பூமிநாதன், தமிழரசி வெங்கடேஷ் உள்ளிட்டோர்கள் வரவேற்பளித்தனர்.

 

Tags :

Share via

More stories