புலிகள் கணக்கெடுப்பு தொடக்கம் சுற்றுலா பயணிகளுக்கு வரும் 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை தடை
திருநெல்வேலி மாவட்ட மேற்குதொடர்ச்சிமலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவிகளில் வெள்ளப்பெருக்கு உருவாக்கியது.இதனால் சுற்றுலாபபயணிகள் குளிக்கத்தடைவிதிக்கபட்ட நிலையில் நேற்று நீர்வரத்து குறைந்ததால் இன்று மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதியளிக்கபட்டுள்ளது.மேலும் புலிகள் கணக்கெடுப்பு தொடங்கப்பட உள்ளதால் மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவிகளில் குளிக்கவும்,மாஞ்சோலை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்லவும், வரும் பிப்.8ம் தேதி முதல் பிப்ரவரி 16ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பில் அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது.
Tags :














.jpg)




