அட்சயா என்னும் சொல்லுக்கு எப்பொழுதும் குறையாதது என்னும் பொருள் சொல்லப்படுகிறது
அட்சய திருதியை என்று அழைக்கப்படும் நாள், இந்து மதம் ,சைனர் மதத்தின் புனிதமான தினமாக கொண்டாடுகிறது.
இது சித்திரை மாதத்தின் வளர்பிறையில் அமாவாசை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படும் நிகழ்வாகும்.
இந்நாளில் தான், பிரம்மா உலகத்தை தோற்றுவித்ததாகவும் கூறப்படுகிறது.
. முதல் யுகமான கி ருதய யுகத்தில் அட்சய திருதியை நாளாக கொண்டாடப்படுகிறது.
இந்து மதம்,திருமாலைகாக்கும் கடவுளாக கொண்டு வழிபடப்படும் மதமாகும். இந்நாள் தான் பரசுராமர் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது.திருமாலின் 10 அவதாரங்களில் ஒன்றாகவும் இது கொண்டாடப்படுகிறது
.இந்து புராண இதிகாசங்களின் படி அட்சய திருதியை நாளில் கிரேதா யுகம் தொடங்கியதாக கூறுவர் .பகிரதன் தவம் செய்த புண்ணிய தீர்த்தமான கங்கை நதி சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு வந்ததாக சொல்லப்படுவதும் இந்த நாளில்தான்..
அட்சயா என்னும் சொல்லுக்கு எப்பொழுதும் குறையாதது என்னும் பொருள் சொல்லப்படுகிறது .சைனமதத்தைச் சார்ந்த தீர்த்தங்கரருள் ரிஷப தேவரின் தினமும் இந்நாளில் தான் கடைபிடிக்கப்படுகிறது.
.அட்சயா திருதியை என்று அழைக்கப்படும் இந்த நாள் நல்ல பலன்களையும் வாழ்க்கையில் வெற்றிகளையும் தரக்கூடிய நாளாக கருதப்படுகிறது..
.மங்களகரமான நிகழ்வுகளுக்கும் பொன் ,பொருள் சேர்க்கைக்கும், இந்நாள் உகந்ததாக சொல்லப்படுகிறது எந்த ஒரு புதிய முயற்சிக்கும் பிள்ளையார் சுழி போடக்கூடிய நாளாக இந்த அச்சையைதிருதி உள்ளது. வியாபாரம், வீடு கட்டுதல் ,தங்கம் ,வைரம், வெள்ளி போன்ற உலோகங்களை வீட்டிற்கு வாங்கக்கூடிய காலமாகவும் கார் போன்ற வாகனங்களை வாங்குவதற்கும் இது உகந்த காலமாகவே சொல்கிறார்கள்..
.சித்திரை மாத வளர்பிறையின் முதல் திதியின் துவக்கமாகவும் ஆவணி மாதத்தின் வளர்புறையின் விஜயதசமியாகவும் வைகாசி மாசத்தின் வளர்பிறையின் மூன்றாம் திதி அட்சய திதியாகவும் கொண்டாடப்படுகிறது.அதனால்தான்,இந்த அட்சயத் திருதி ஒரு முக்கியமான ஒரு காலமாக சொல்கிறார்கள் .
இந்த நாளில் தான் சூரியனும் சந்திரனும் தன் சம அளவு பலத்தோடு ஒளியை வழங்குவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நன்னாளில் தான் ,சிவபெருமான் அன்னபூரணி தாயாரிடம் இருந்து பிச்சை பாத்திரத்தில் முழு அளவு உணவைப் பெற்ற நாளாகவும் இதைச் சொல்கிறார்கள்
செல்வத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய குபேரர் லட்சுமியை வணங்கக்கூடிய நாளாகவும் இது உள்ளது.
திருமாலின் அவதாரமான பரசுராமர் பிறந்த நாளாகவும் இது நம்பப்படுகிறது. ஆகவே தான், இந்த அட்சய திரிதய நாளில் நெல் அரிசியுடன் உண்ணா நோன்பு இருந்து புனித நதியில் நீராடி மங்களகரமான செயல்களை செய்வதற்கு உகந்த தினமாக சொல்கிறார்கள்
.இந்த நாள் திருமணங்களுக்கும் திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கும் கூட உகந்த நாளாக சொல்கிறார்கள்.
விஜயதசமி அன்று குழந்தைக்கு எழுத்தை கற்றுக் கொடுப்பது போல வாழ்க்கைக்கான நல்ல வழிகளை கற்றுக் கொடுக்கக்கூடிய துவக்க நாளாக இந்த அட்சய திருதி நாளை இந்து மதத்தினர் கொண்டாடிவருகின்றனா்..
Tags :