திருப்பதி ஏழுமலையானுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மாலைகள்.

by Editor / 01-10-2022 12:01:10am
திருப்பதி ஏழுமலையானுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மாலைகள்.

 திருப்பதி மலையில் நாளை நடைபெற இருக்கும் மோகினி அலங்கார சேவை கருட  சேவை ஆகியவற்றில் அலங்கரிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கொண்டுவரப்பட்ட மலர்மாலைகள் இலைகளால் செய்யப்பட்ட பச்சைக்கிளி மலர் ஜடை ஆகியவை  ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்பட்டன

 பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெறும் கருட வாகன சேவை அன்று உற்சவருக்கும் மூலவருக்கும் அலங்கரிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஆண்டாளுக்கு சூட்டப்பட்ட மலர் மாலைகளை திருப்பதி மலைக்கு கொண்டு வருவது வழக்கம்.

 ஆண்டாளுக்கு சூட்டப்பட்ட மலர் மாலைகள் பின்னர் பெருமாளுக்கு அணிவிக்கப்படுவதால் ஆண்டாளுக்கு சூடிக்கொடுத்த சுடர்கொளியாள் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது.

 புராண காலத்தில் ஆண்டாளுக்கு சூட்டப்பட்ட மாலைகள் பெருமாளுக்கு மீண்டும் சூடப்பட்டதை  நினைவூட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி ஏழுமலையான் கோவில் கருட வாகன சேவை நடைபெறும் அன்று ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கொண்டுவரப்படும் மலர் மாலைகள் பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

 அந்த வகையில் நாளை  திருப்பதி மலையில் நடைபெற இருக்கும் கருட வாகன சேவையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாளுக்கு சூடப்பட்ட மலர்மாலைகள், இலைகளால் தயார் செய்யப்பட்ட பச்சை கிளிகள், மலர் ஜடை,பட்டு வஸ்திரம், மங்களப் பொருட்கள் ஆகியவை திருப்பதி மலைக்கு கொண்டுவரப்பட்டன.

 அவற்றை   இணை ஆணையர்,சுதர்சன், செல்லதுரை நிர்வாக அதிகாரி, முத்துராஜா தக்கார், ரவிச்சந்திரன் ஸ்தலத்தார், ரமேஷ் பிரசன்ன வெங்கடேசன் சுதர்சன் ஆகியோர் ஏழுமலையான் கோவில் எதிரில் இருக்கும் ஜீயர் மடத்தில் நடத்தப்பட்ட சிறப்பு பூஜைகளுக்கு பின் கோவில் மரியாதைகளுடன் ஊர்வலமாக கொண்டு சென்று  ஜீயகளிடம் ஒப்படைத்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கொண்டுவரப்பட்ட மலர்மாலைகள் இன்று  நடைபெற்ற  கருட வாகன சேவையை முன்னிட்டு மூலவர் ஏழுமலையானுக்கும், கருட வாகன சேவையில் எழுந்தருளிய உற்சவர் மலையப்ப சாமிக்கு அலங்கரிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கொண்டுவரப்பட்ட மலர் ஜடை, இலைகளால் தயார் செய்யப்பட்ட பச்சைக்கிளி ஆகியவை இன்று காலை திருப்பதி மலையில்நடைபெற்ற  மோகினி அலங்கார ஊர்வலத்தில்உற்சவருக்கு அணிவித்து  அலங்கரிக்கப்பட்டது.
 

 

Tags :

Share via