கோவில் திருவிழா இந்து,முஸ்லீம் மதத்தினர் கூட்டு வழிபாடு ஆயிரம் கிலோ ஆடு,101 கோழிகளை பலியிட்டு வழிபாடு

by Editor / 01-10-2022 07:42:34am
கோவில் திருவிழா இந்து,முஸ்லீம் மதத்தினர் கூட்டு வழிபாடு  ஆயிரம் கிலோ ஆடு,101 கோழிகளை பலியிட்டு வழிபாடு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பிள்ளையார் குளம் கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அரைக்காசு அம்மன் கோவில் புரட்டாசி மாத திருவிழாவை முன்னிட்டு ஆயிரம் கிலோ ஆடுகளை பலியிட்டு 101 கோழிகளை பலியிட்டும் இந்து முஸ்லீம் மதத்தினர் கூட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர் பங்கேற்ற பக்தர்களுக்கு ஆயிரம் கிலோ கரி விருந்து பரிமாறப்பட்டதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

கடந்த மூன்று தலைமுறை காலத்திற்கு மேலாக நடைபெறும் சமூக ஒற்றுமை இந்த திருவிழாவில் பிள்ளையார்குளம் சாயல்குடி கமுதி கடலாடி உள்ளிட்ட சுற்று வட்டார பல்வேறு பகுதிகளில் இருந்து இந்து முஸ்லீம் மதத்தை சேர்ந்த ஆண்களும் பெண்களும் ஆர்வமுடன் பங்கேற்கும் இந்து மதத்தை சேர்ந்த பக்தர்கள் தாங்களது மத வழிபாட்டு ம முறைகறின் படி நெய்விளக்கு தேங்காய் விபூதி ஊதுபத்தி ஆகியவற்றுடன்  முஸ்லீம் மதத்தினர் சக்கரை மல்லிகை பூ
பூந்தி உள்ளிட்ட பூஜை பொருட்களுடன் வழிபட்டுச் செல்லும் முறைஒவ்வொரு ஆண்டும் காலங்காலமாக நடைபெற்று வருகிறது.

சமூக ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் பிள்ளையார்குளம் கிராமத்தில்  அரக்காசு அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிட்டதக்கது.

 

Tags :

Share via