சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூபாய் 86 லட்சம் வசூல்

by Editor / 01-10-2022 07:45:31am
 சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூபாய் 86 லட்சம் வசூல்

 திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றி உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

அவ்வாறு பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை கோவில் நிர்வாகம் மேற்பார்வையில் மாதம் இருமுறை எண்ணப்படுவது வழக்கம்.அதன்படி பக்தர்கள் காணிக்கை செலுத்திய உண்டியல்கள் இரண்டாவது முறையாக திறந்து எண்ணப்பட்டது. 37 உண்டியல்கள் எண்ணப்பட்டதில் ரூபாய் 86 லட்சத்து 61ஆயிரம் ரொக்கம்,  1 கிலோ 889 கிராம் தங்கம், 3 கிலோ 654 கிராம் வெள்ளி மற்றும் 184 அயல்நாட்டு நோட்டுகள் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

 

Tags :

Share via

More stories