சீனாவில் பள்ளி தீ விபத்தில் 13 பேர் பலி

by Staff / 20-01-2024 12:07:26pm
சீனாவில் பள்ளி தீ விபத்தில் 13 பேர் பலி

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயியிரிழந்ததாக அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. ஹெனானின் யான்ஷான்பு கிராமத்தில் உள்ள யிங்காய் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து உள்ளூர் தீயணைப்பு துறைக்கு இரவு 11 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது. 13 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது, ஒருவர் காயமடைந்துள்ளதாக செய்தி நிறய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 11:38 மணியளவில் தீயை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஒரு மாதத்திற்கு முன்பு, வடமேற்கு சீனாவில் உள்ள பார்பிக்யூ உணவகத்தில் ஏற்பட்ட விபத்தில் 31 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via

More stories

Logo