சென்னை மாநகர காவல் ஆணையரை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை விடுத்துள்ள வில்லிவாக்க வேட்பாளர் ஆதவ் அர்ச்சுனா..

by Admin / 06-04-2026 07:58:45pm
சென்னை மாநகர காவல் ஆணையரை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை விடுத்துள்ள வில்லிவாக்க வேட்பாளர் ஆதவ் அர்ச்சுனா..

தமிழக வெற்றி கழகத்தின் வில்லிவாக்க வேட்பாளரும் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ச்சுனா தேர்தல் ஆணையத்திடம் சென்னை மாநகர காவல் ஆணையரை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை விடுத்துள்ளார்.தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மற்றும் பிற வேட்பாளர்களின் தேர்தல் பரப்புரைக்கு காவல்துறையினர் முழுமையான அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்கவில்லை என்றும் பெரம்பூர் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் பரப்புரை செய்ய அனுமதி கோாிய போது காவல்துறையினர் மிகக் குறைந்த நேரமே அனுமதி அளித்ததாகவும் இது ஆளுங்கட்சியின் அழுத்தத்தால் நடப்பதாகவும் தெரிவித்தார் .சென்னை காவல் ஆணையர் மாற்றப்பட்டால் தான் எல்லா கட்சித் தலைவர்களும் பாரபட்சமின்றி பிரச்சாரம் செய்ய முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் விஜயின்  தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதற்கு பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் காவல் துறையின் கட்டுப்பாடுகள் தான் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo