புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தர பாடுபடுவோம்.-தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமானமு. க .ஸ்டாலின்

by Admin / 06-04-2026 08:13:18pm
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தர பாடுபடுவோம்.-தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமானமு. க .ஸ்டாலின்

இன்று புதுச்சேரி தட்டஞ்சாவடியில் காங்கிரஸ்- திமுக கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமானமு. க .ஸ்டாலின் பரப்புரை.புதுச்சேரி மண் புதுமையை விரும்பும் மண்;பாரதிதாசன் பிறந்த மண்.தமிழகத்தில் பாஜகவின் அடிமையாக எடப்பாடி இருப்பது போல் புதுச்சேரியில் அடிமையாக இருப்பவர் என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி என்றும் இவருடைய நிலைமை பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட கதை தான் ஏற்படும் என்றும் தெரிவித்ததோடு ரங்கசாமியே சமீபத்தில் சொன்னார் அதிகாரம் அற்ற ஒரு ஆளும் அரசு புதுச்சேரி அரசு என்று சொன்னார். துணைநிலை ஆளுநர் மாளிகையில் எத்தனையோ கோப்புக்கள் தேங்கி கிடக்கின்றன என்றும் திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தால் பல்வேறு வளர்ச்சி பணிகளை புதுமைக்கு செய்வோம் என்றும் தெரிவித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

 புதுச்சேரி மக்களால் தேர்வு செய்யப்படும் முதல்வருக்கே அதிகாரம் உள்ளதாகவும் அதற்கான முயற்சிகளை திமுக கூட்டணி அரசு செயல்படுத்தும்

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற முதலமைச்சருக்கு அதிகாரம் என்பதை உறுதி செய்யப்படும்.

காரைக்காலில் நவீன மேம்படுத்தும் தொழில் கூடம் ஆரம்பிக்கப்படும்

 புதுச்சேரி யில் முழுமையான பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்படும்

 கிராம சாலைகள் தரம் உயர்த்தப்பட்டு பாதுகாக்கப்படும்

 புதுச்சேரி . ஏனாம், மாகையில் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும்

புதுச்சேரி , காரைக்காலை மாநகராட்சி யாக தரம் உயர்த்தப்படும்

அரசு ஆடை வடிவமைப்பு கல்லூரி தொடங்கப்படும்

காரைக்காலில் நவீன மீன் பதப்படுத்தும் பூங்கா

புதுச்சேரி யில் முழுமையான பாதலை சாக்கடை திட்டம் அமைக்கப்படும்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தர பாடுபடுவோம்.

மத்திய நிதி குழுவில் புதுச்சேரி யை சேர்க்கவும் மோட்டார் வாகன உற்பத்தியாளர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 மென்பொருள் தொழில்நுட்பநிறுவனங்கள் தோற்றுவிக்கப்படும்.

காரைக்காலில் நவீன அரிசி கிடங்குகள் ஆலைகள் அமைக்கப்படும்.

அரசு ஆடை வடிவமைப்பு கல்லூரி தொடங்கப்படும்.

 

 

Tags :

Share via
Logo