போலி மருந்துகளை எளிதில் கண்டறிய புதிய வசதி

by Staff / 04-10-2022 05:03:24pm
போலி மருந்துகளை எளிதில் கண்டறிய புதிய வசதி

நாட்டில் அதிகம் விற்பனையாகும் மற்றும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த மருந்துகளின் தரம் மற்றும் பயன்பாட்டை கண்காணிக்கும் வகையிலும், போலி மருந்துகள் விற்பனையைத் தடுக்கும் வகையிலும், டிராக் மற்றும் டிரேஸ் என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக நாட்டில் அதிகம் விற்பனையாகும் 300 மருந்து பொருள்களின் லேபிள்கள் மீது பார்கோடு அல்லது க்யூஆர் கோடு பிரிண்ட் செய்யப்பட இருக்கிறது.

இந்த க்யூஆர் கோடை, செல்போனில் ஸ்கேன் செய்து, மருந்து தயாரிக்கப்பட்ட தேதி, தயாரித்த நிறுவனம், விலை உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம். முதலில், ஆன்டிபாடி, இதய நோய், வலி நிவாரணி, உள்ளிட்ட மருந்துகளுக்கு இந்த வசதி அறிமுகமாகிறது. இந்த நடவடிக்கை மூலம், மருந்துகளின் விலை 3-4 சதவீதம் அதிகரிக்கலாம் என மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

 

Tags :

Share via

More stories

Logo