ரூ.2670 கோடி நிலுவைத் தொகை.. மத்திய அமைச்சருக்கு வலியுறுத்தல்

டெல்லியில் இன்று மத்திய நுகர்வோர் நலன் மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியுடன் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சந்தித்தார். அப்போது, ரூ.2670.64 கோடி நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரிக்கை விடுத்தார். மேலும், இந்திய உணவுக்கழக தொகுப்பில் இருந்து முழுவதுமாக புழுங்கல் அரிசியாக வழங்க வேண்டும் எனவும் காரிப் பருவ கொள்முதலை உயர்த்த நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார்.
Tags :