சுபான்ஷூ சுக்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

சர்வதேச விண்வெளி மையத்தில் 7 ஆய்வுகள் செய்வதற்காக இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா விண்வெளி புறப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது, "சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றுள்ளார். சுபான்ஷூ சுக்லா ஒட்டுமொத்த இந்தியர்களின் விருப்பங்கள், நம்பிக்கைகளை தன்னுடன் சுமந்து செல்கிறார். சுபான்ஷூ சுக்லாவுக்கும், மற்ற விண்வெளி வீரர்களுக்கும் வெற்றி கிடைக்க வாழ்த்துகள்” என்றார்.
Tags :