வயநாட்டில் கனமழை.. நிலச்சரிவு ஏற்படும் அபாயம்?

கேரள மாநிலம் வயநாடு அருகே முண்டகை பகுதியில் இடைவிடாது பெய்துவரும் கனமழை காரணமாக அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. புன்னம்புழா ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருவதால், ஆற்றின் மறுபுறம் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். இதுவரை நிலச்சரிவுக்கான எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்றாலும், சரிவு அபாயம் இருக்கும் பகுதிகளில் பொதுமக்கள் நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Tags :